Tamil marriage wishes | tamil wishes for marriage | Happy Anniversary Tamil | wedding wishes for sister in tamil | marriage wishes quotes | wedding கவிதை | happy wedding anniversary in tamil | wedding anniversary wishes in tamil for wife | Wedding wishes Tamil | Sri lanka tamil wedding wishes | Sri lanka tamil wedding anniversary wishes.
அற்புதமான நாவலுக்கு போடப்படும்
அழகான முன்னுரையே திருமணம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
-------
வெறும் கைகளை கோர்த்து கொள்ளாமல்
இதயங்களை கோர்த்து கொள்ளுவதே திருமணம்
இனிய திருமண நல்வாழ்துகள்
-------
கண் மூடி கண்ட கனவெல்லாம்
கண் எதிரே காணும் விழாகோலம்
கனவும் நினைவாக வாழ்க்கையில்
நகரும் அன்பின் தோரணம் திருமணம்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
கட்டப்பட்ட காதல் பலத்தில்
போகும் பயணங்கள் இனித்திடும்
உயிர்களின் இணைவு திருமணம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
------
இணைபிரியா தம்பதிகளாக
நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் வாழ்க.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
-------
வாழ்க்கை என்பதன் பொருளுக்கு
அர்த்தம் தெரியும் மிக சிறந்த நாளே
உன் திருமண நாள்.இன்று போல என்றும்
உன் துணையுடன் சிறப்பாக கொண்டாடு
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
-------
இரு வேறு செடிகளாய் வளர்ந்து உங்கள் வாழ்வில்
திருமணம் என்னும் ஒரு வேரில்
உறவு எனும் பூ பூத்து
அன்பு என்னும் காய் காய்த்து
சந்தோஷம் என்னும் கனி தந்து
எழில் கொஞ்சும் சோலையாய் வாழ வாழ்த்துகிறேன்.
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
-------
பால் நிலவும்
பகல் சூரியனும்
நல்ல சொந்தங்களும்
இனிய நட்புகளும்
சேர்ந்து மகிழ்ந்து வாழ்த்தும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
-------
திருமணம் என்ற பந்தத்தினால்
குடும்பம் என்ற ஒன்றிலே
இணையவிருக்கும் இந்த நல்ல நாள்
இன்பமாகவும் ஊர் போற்றும் தம்பதியாக
இணை பிரியாது வாழ வாழ்த்துக்கள்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
-------
இணைபிரியா வாழ்வில்
இன்பமே என்றும் கொள்வீர்
முடிச்சுப்போட்ட வாழ்க்கையில்
முடிவிலா மகிழ்ச்சி காண்பீர்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
---------
நாள் பாத்து பந்தலிட்டு
இரு மனதிலும் கனவில் ஊஞ்சலிட்டு
முற்றத்தில் வாழை மரம் நட்டு
ஊர் சாட்சியாய் நடக்கும்
உயிர்களின் புது உலகம் திருமணம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
---------
நோய் நொடியின்றி
நீண்ட காலம் வாழ
பணம் பதவி தேவையில்லை
நல்ல துணை இருந்தாலே போதும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
---------
அதிகாலை பனிபோல
அற்புதமான வாழ்க்கையின் தருணம் இவை
ஆயிரம் உறவுகள் கூடி கோர்த்த மாலைகள்
கழுத்தில் சூடி அர்ச்சனை இடும் ஆனந்த கான.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
---------
தித்திக்கும் இன்றைய தினம் போல்
என்றும் இன்பமாக சிறப்பாக கோலாகலமாக
அமையட்டும் என வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
---------